உயிரியல் பேரிடர்

பெரிய அளவிளான தொற்று நோய் பரவுதல், அறியா வண்ணம் அதிக வீரியமுள்ள நுண்ணுயிர்களின் பரவுவதல் மூலமாகவே அல்லது பெரிய அன்மை, ஆந்தராஸ் போன்ற தொற்று நோய் கிருமிகள் வகை பாதிப்புகளாலோ உயிரியல் பேரழிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மருத்துவ தயார்நிலை

நுண்ணுயிர் தாக்குதலின் வீரியம் மற்றும் தன்மையின் அடிப்படையிலேயே மருத்துவ தயார் நிலை அமையும். குறிப்பிடத்தக்க தயார் நிலை என்பது செவிலியர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுக்கு நுண்ணுயிர் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முன்கூட்டியே தடுப்பூசி செலுத்துதல் போன்றவை அடங்கும். இது தவிர நுண்ணுயிர் தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவருவது, பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது மருத்துவமனை பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்து, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளித்தல் மருத்துவமணை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், டிசிட்டல் முறையிலான மருத்துவ விவரங்கள் சேகரித்தல் போன்றவை அழிவு மற்றும் உயிரழப்புகளை பெருமளவு குறைக்க உதவும். மருத்துவ தயார் நிலை என்பதில் நுண்ணுயிர் பாதிப்புகளின் மாதிரிகளை சேகரித்து உரிய பயிற்சி பெற்ற மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட பல ஆய்வகங்களை இணைத்து சோதித்து முடிவுகளை பெறுவதும் அடங்கும்.

நுண்ணுயிர் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறைகள் பின்வருமாறு

அ) நுண்ணுயிர் தாக்குதலின் போது அவசர சிகிச்சையில் ஈடுப்படும் அல்லது உட்படுத்தப்படும் மருத்துவ பணியாளர்கள் தங்களை முதலில் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆ) நுண்ணுயிர்தாக்குதலின் தன்மை மற்றும் வீரியத்தை பொருத்து மருத்துவ தற்காப்பு முறைகள், மருத்துவ முகப்பாதுகாப்பு கவசம் அணிதல், கையுரை அணிதல் மற்றும் சூ - 95 பிராணவாயு கருவிகள் பயன்படுத்துதல் போன்றவை அடங்கும். மருத்துவத்திற்கான நிலையான வழிமுறைகளை தற்பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் பொழுது கடைப்பிடிக்கப்பட வேண்டும். தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் முறையினை மருத்துவ சேவை மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

இ) பேராபத்து விளைவிக்கும் நுண்ணுயிர் தாக்குதலில் பெரியம்மை, ஆந்தாரக்ஸ், கொள்ளை நோய் போன்ற மனிதர்களிடம் வேகமாக பரவும் நோய்களுக்கு நிலையான வழிமுறைகளை காட்டிலும் சிறப்பு வழிமுறைகளை கையாள்வது முக்கியமானது.

ஈ) நுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்போர் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பதோடு மற்ற நபர்களிடமிருந்து குறிப்பிட்ட இடை வெளியில் இருப்பது நல்லது.

நுண்ணுயிர் தாக்குதலை கையாளும் முறைகள்

அ) மருத்துவம் மற்றும் மருத்துவம்சார் பணியாளர்கள்

நுண்ணுயிர் தாக்குதல் குறித்தும் மருத்துவ தற்காப்பு முறைகள் குறித்தும், மாதிரிகளை சோதனை செய்வது மற்றும் முடிவுகளை தெரிவிப்பது குறித்தும், பொது பாதுகாப்பு பயிற்சி குறித்தும் உரிய பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.நுண்ணுயிர் தாக்குதலின் தடுப்பு முறை கையாள்வதுடன் பிரத்யோக பயிற்சி பெற்ற மருத்துவ குழு ஒன்றை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

ஆ) புற நோயாளிகள் பிரிவு

போதிய நோயாளிகளை சிகிச்சை அளிக்க வசதியுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளை முன்சோதனை போன்ற முறைகளை கையாள சிறு பகுதியினை ஒதுக்கி தொடர்ந்து வரும் நோயாளிகளை கையாளும் வகையில் தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். நுண்ணுயிர் பேரிடர் காலங்களில் ஒவ்வொறு மருத்துவமனையும் 50 புற நோயாளிகளை கையாளும் வகையில் தயார் நிலையில் இருந்திடல் வேண்டும்.

இ) தனி பிரிவுகள்

பேரிடர் காலங்களில் நுண்ணுயிர் தொற்று பிறரை பாதிக்காத வகையில் தனி பிரிவுகள் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகரிக்கும் நோயாளிகளுக்கு ஏற்ப்ப காத்திருப்பு பகுதி, பொது பகுதி, பக்கவாட்டு பகுதிகள், கூட்ட அறைகள் போன்றவற்றை புற நோயாளிக்கான பிரிவாக உடன் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஈ) பாதுகாப்பு ஏற்பாடுகள்

பேரிடர் காலங்களில் நிலையான பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில், நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள், மிக முக்கியஸ்தர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை கையாண்டு கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாக உதவியை அனுகலாம்.

உ) பாதிக்கப்பட்டோரை கையாளுதல்

இந்த நிலை பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி மற்றும் அறிமுக சிகிச்சை அளிப்பதிலிருந்து தொடங்குகிறது. பாதிக்கப்பட்டோர்களை கையாளும்பொழுது பாதிப்பு வீரிய தன்மைக்கேற்ப அவர்களுக்கு பிரத்யேக எண்கள், பல வண்ணங்கள் கொண்ட கையில் அணியக்கூடிய வளையங்கள் மூலமாக அவர்களை பிரித்து அடையாளப்படுத்தி கையாள வேண்டும். இழப்புகளை கருப்பு வண்ணம் கொண்ட கைவளையம் கொண்டு அடையாளப்படுத்த வேண்டும்.

ஊ) இறந்த உடல்களை கையாளுதல்

மருத்துவமனைகளில் அனுமதிக்கும் பொழுது பாதிக்கப்பட்டு இறந்திருப்பாரேயானால் அதனை தனிமைப்படுத்தி தனி வழியாக அதற்காக ஒதுக்கப்பட்ட பிணவறையில் உடலை பாதுகாக்கப்பட வேண்டும். அதிகரிக்கும் உயிர் இழுப்புகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாக்க உரிய பிணவரை வசதிகள் உடன் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எ) பரிசோதித்தல்

அனைத்து நுண்ணுயிர் தாக்குதலை பரிசோதிக்கும் ஆய்வகம் மற்றும் உபகரணங்களும் தயார் நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏ) தகவல் பரிமாற்றம்

அனைத்து தகவல் பரிமாற்ற உபகரணங்களும் தயார் நிலையில் வைத்திருப்பதோடு கைப்பேசி சேவையினையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

ஐ) மருத்து இருப்பு

அவசர சிகிச்சை பரிவில் குறைந்த பட்சம் 50 நோயாளிகளை கையாளும் வகையில் மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் போதிய மருத்துவ பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

ஏ) இரத்த சேமிப்பு நிலையம்

இந்த இரத்த சேமிப்பு நிலையங்களில் போதிய இரத்தம் மற்றும் இரத்தம் சார் கூறுகள் இருத்தல் வேண்டும். இரத்த தானம் செய்வோரை ஊக்குவித்து அதிகரிக்கும் தேவையை கையாள வேண்டும்.

ஏ) பிற முக்கிய உதவிகள்

தடையற்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைத்திடுமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடமாடும் குழுக்கள்

நடமாடும் குழுக்களின் செயல்பாடுகள்

  • நுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்ட அல்லது தொற்று நோய் பரவுவதாக கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடன் விரைந்து சென்று முதற்கட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும்,
  • நிகழ்விடத்திலேயே முதற்கட்ட சிகிச்சைகளை அளிப்பதோடு பாதிக்கப்பட்டோரை அப்புறப்படுத்துவது தொற்று பரவுவது அல்லது பாதிப்பின் தன்மையை மதிப்பீடு செய்வது உரிய தொடர்புடைய நபர்களுக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்
  • பெரிய அளவிலான உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படுமாயின் கூடுதல் மருத்துவக் குழுக்களை நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
  • போதிய மருத்துவ பொருட்கள், முக்கிய மருந்துகள் போதிய அளவில் வரவழைக்கப்பட்டு மருத்துவ குழுக்களுக்கு வழங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.
  • குறுகிய காலத்தில் அவசர மருத்துவ சேமிப்பு உரிய விதிகளின் கீழ் மாநில அரசால் உருவாக்கப்பட்டு 25 முதல் 100 வரையான பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அனைத்து நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ குழுக்களுக்கு உரிய மற்றும் உயரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு எந்த நேரத்திலும் பேராபத்துக்களை சந்திக்ககூடிய வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது

காலரா அல்லது வயிற்று போக்கு தொடர்பான நோய் தொற்று

செய்யக் கூடியது

1. கைகளை சுத்தமாக வைத்திருத்தல்
2. சுத்தமான குடிநீரை அல்லது குளோரின் கலந்த சுத்தமான குடிநீரை பயன்படுத்த அறியுருத்தல். பிளீச்சிங் பவுடரை அனைத்து சமுதாய கிணறுகளிலும் உபயோகப்படுத்தி சுத்தமாக வைத்திருத்தல் சமுதாய ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்துதல்.
3. 15 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்கப்பட்ட குடிதண்ணிரை பருகு வேண்டும்.
4. குறுகிய முகப்பு கொண்ட கொள்களனை குடி தண்ணீருக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
5. மாமிசம் அல்லது மாமிசம் அல்லாத உணவு பொருட்களை நன்குச் சமைத்து அதன் ஊஷ்ண நிலையிலேயே உண்ண வேண்டும்.
6. மாமிச உணவுகள் நன்றாக சமைக்கப்பட்டுள்ளதா என கவனித்து உண்ண வேண்டும். சமைத்த பின்பு இயல்பாக இல்லை என்றால் தவிர்த்துவிட வேண்டும். முட்டையை பொருத்தமட்டும் ஓடு உடையாமல் இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
7. சமைத்த உணவின் உஷ்ண நிலை தனிந்து விட்டால் மீண்டும் உஷ்ண படுத்திய பின்பு உண்ண வேண்டும்.
8. உணவு பொருட்களை பத்திரமாக மூடி வைக்க வேண்டும்.,
9. வயிற்று போக்கு ஏற்பட்டால் உடன் அதிகப்படியாக நீர் அருந்துவதுடன் உப்புகரைசலையும் அருந்த வேண்டும்.
10. பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய வாழை பழங்கள் உண்பது நல்லது.
11. குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவளித்து வர வேண்டும். தாய்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்பால் வழங்கபட்டு வர வேண்டும்.
12. குழந்தைகள் சோர்வுடன் காணப்பட்டாலோ, உணவு மற்றும் தண்ணீர் அருந்த மருத்தாலோ, தாகத்தோடு காணப்பட்டாலோ, தவிப்புடன் ஸ்திர தன்மையற்று இருந்தாலோ அருகாமையில் உள்ள மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும்.

செய்யகூடாதவை

1. பாதுகாப்பற்ற முறையில் கிடைக்கப் பெறும் குடி தண்ணீரை உபயோகப்படுத்தகூடாது.
2. சமைக்கப்படாத உணவினை உட்கொள்ளக்கூடாது.
3. சமைக்கப்பட்ட உணவினை 2 மணி நேரங்களுக்கு மேலாக அறை வெப்ப நிலைக்கு வைத்திருத்தல் கூடாது.
4. துண்டாகப்பட்ட பழங்களை விற்பணை செய்பவரிடமிருந்து பெற்று உண்ணுதலை தவிர்க்க வேண்டும்,
5. வெளிப்புறங்களில் மலஜலம் கழிக்க கூடாது.
6. வசிப்பிடங்களில் எலி மற்றும் ஈக்கள் வரா வண்ணம் பார்ததுக் கொள்ள வேண்டும்.

சுவாசம் தொடர்பான காசநோய், சயரோகம், அம்மை நோய் மற்றும் பொன்னுக்கு வீங்கி நோய்கள்

செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

1. சுவாசக் கோளாறு தொடர்பாக நோய் உள்ளவர்களிடம் நெருங்கி பழகுதலை தவிர்க்கவும்
2. சுவாசக் கோளாறு தொடர்பாக வியாதி அறிகுறிகள் தென்ப்பட்டவுடன் வசிப்பிடத்திலேயே இருக்க வேண்டும். பொது இடங்களான பள்ளி, அலுவலங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
3. வீட்டிலிருக்கும் நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
4. சுவாசக் கோளாறு தொடர்பான நோய் தொற்று உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
அ) நோய் தொற்று உள்ளவர்கள் இரும்பல் வரும்பொழுது கைகுட்டி அல்லது திசு காகிதம் கொண்டு மறைத்து மேற்கொள்ள வேண்டும். பின்னர் உபயோகித்த காகிதத்தை தவறாமல் குப்பை கூடையில் வீசி விட வேண்டும்.
ஆ) கைகளை அவ்வப்பொழுது கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை ஒரு முறை துடைக்க உபயோகிக்கும் திசு காகிதங்களை பயன்படுத்த வேண்டும்.
5. சான்றளிக்கப்பட்ட மூன்று பாதுகாப்பு அடுக்குகளையுடைய வரையறுக்கப்பட்ட மருத்துவ முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் .இதனை வசிப்பிடத்திலிருந்து மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் பயன்படுத்த வேண்டும்.
6. நன்றாக உறங்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க அல்லது குறைத்து சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும். திரவ மற்றும் சத்தான உணவை நிறைய உண்ண வேண்டும்.
7. புகைப்பிடிப்பதை தவரிக்க வேண்டும்.
8.மூச்சு திணரல் அல்லது சுவாசக் கோளாறு உள்ள நபர்கள் உடன் மருத்துவ ஆலோசனை பெற்று அருகில் உள்ள மருத்துவமனையை நாட வேண்டும்.
9. சுவாசக் கோளாறு தொடர்பான நோய் தொற்று உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்ல நேரிட்டால் முகத்தை நன்றாக கைகுட்டை அல்லது திசு காகிதத்தால் நன்றாக மூடி தும்மலை தொடர வேண்டும். இதன் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.
10. வரையறுக்கப்பட்ட உலக அளவிலான நோய் தடுப்பு முறைகள் நாளது தேதி வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கொசுக்களால் உண்டாகும் மலேரியா, டெங்கு, பைலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் குறித்து

செய்யக் கூடியது

1. கை மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் வகையில் உடை உடுத்துதல் வேண்டும்.
2. திறந்த வெளி நீர் தேக்கம் அல்லது பாதுகாப்பற்ற ஆதாரங்களிலிருந்து நீரை பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.
3. வாரம் ஒருமுறை தண்ணீர் சேமிப்பு அமைப்புகளை சுத்தம் செய்யப்பட வேண்டும்.
4. குளிரூட்டி இயந்திரங்களிலிருந்து அவ்வப்போது தண்ணீர் மாற்றப்பட வேண்டும்.
5. கழிவு நீர் தொட்டியை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
6. முடிந்த வரையில பூச்சிகளை விரட்டும் தன்மைகள் கொண்ட கொசு வலைகள் பயன்படுத்த வேண்டும்.
7. கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்
8. சிராய்ப்பு, மனஅழற்சி அல்லது சுயநினைவு மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.

செய்யகூடாதவை

1. குழந்தைகளை உடல் பாகங்கள் தெரியும்படி ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.
2. தண்ணீர் தேங்கி நீர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
3. உபயோகமற்ற டயர், தேங்காய் ஓடு, குழாய்கள், வீட்டு சமான்களில் தண்ணீர் தேங்க விடாமல் உடன் அகற்றிவிட வேண்டும்.
4. கால்நடைகள் பயன்படுத்தும் கிராம குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.