வண்டல் மண் தூர்வாருதல்

2016-17 ல் ஏற்பட்ட வறட்சி காரணமாக கனிம வளங்கள் மேலாண்மையில் பெருமளவு கொள்கை முடிவுகளில் மாற்றம் கொண்டு வரப்பெற்றது. இதன்படி தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1959 பிரிவு 12(2) மற்றும் 12(2- A) ஆகியவை திருத்தப்பட்டன.

அரசாணை (நிலை) எண்.50, தொழில்துறை, நாள் 24.04.2017 அரசாணையில் சிறு கனிம விதிகளின்படி திருத்தம் செய்து விவசாயிகள் பூமியிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கு உத்திரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அவர்களின் நிலத்திற்கு தேவையான ஒரு நல்ல ஊட்டசத்து உரத்திற்கான மண் வளத்தினை நீர் நிலைகள் / நீர்தேக்கங்களிலிருந்து கட்டணமின்றி இலவசமாக எடுத்து கொள்ள வழிவகை செய்துள்ளது. இது விவசாய நிலங்களின் மண் வளத்தினை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் நீர் நிலைகளின் கொள்ளளவு திறனை அதிகபடுத்த உதவுகிறது.

இத்திட்டம் மாவட்டங்களில் அரசாணையின்படி செயல்படுத்தபடுகிறதா என்பதனை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினரால் கண்காணிக்கப்படுகிறது. வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் முயற்சியினால் நீர்நிலைகள் / குளங்களிலிருந்து 5.6 கோடி கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் நீர் நிலைகளில் 2 டி.எம்.சி அளவு நீர் சேமிக்கக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களின் வளத்தினை பேணவும் மற்றும் நீர் நிலைகளின் கொள்ளளவு திறனை அதிகப்படுத்திடவும் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினரால் 2017-ல் நீண்டகால திட்டமாக எடுத்து செயல்படுத்தப்பட்டது. இந்த வெற்றிகரமான திட்டத்தினை 2018 - ஆம் ஆண்டிலும் இதே உத்வேகத்தோடு தொடர்ந்திடுமாறு மாவட்டங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.