பிற அபாயங்கள்

தீ விபத்து மற்றும் வெடிபொருள்கள்

1. தமிழ்நாடு தீ விபத்துக்களால் பெரிதும் பாதிக்கக்கூடிய மாநிலம். தமிழகத்தின் சில பகுதிகள் அதி தீவிர தீ விபத்து பாதிப்பு பகுதிகள் ஆகும். சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அதிதீவிர தீ விபத்து பாதிப்பு பகுதிகளாகும். கடலூர், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகியவை உயர் தீ விபத்து ஆபத்து பகுதிகளில் வருகின்றன. இப்பகுப்பாய்வானது மக்களடர்த்தி, குடியிருப்பு கட்டுமான பகுதி மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

2. தமிழ்நாட்டில் இரண்டு வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாடு வெடிபொருள் தொழிற்சாலை லிமிடெட் (கூநுடு) வேலூர் மாவட்டம் காட்பாடியிலும், தமிழ்நாடு கார்டைட் தொழிற்சாலை நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவங்காடு பகுதியிலும் அமைந்துள்ளன. இவ்விரு தொழிற்சாலைகளும் தீ விபத்து அபாயம் அதிகமுள்ள பகுதிகளாகும்.

3. நீலகிரி, சேலம், தேனி மற்றும் தர்மபுரி மாவட்ட காடுகள் காட்டுத்தீ அபாயம் மிகுந்த பகுதிகள். கடந்த 2004-ல் ஏற்பட்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 93 மாணவர்கள் இறந்தமை தீ விபத்து எங்கும் நேரலாம் என்ற தகவலை நமக்கு நினைவூட்டுகிறது.

இராசயனம், உயிரியல்கதிரியங்கம் மற்றும் அணுகதிர்கள்

தமிழ்நாடு தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலமாகும். இதனால் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படக்கூடிய விபத்துகளுக்கு சாத்தியக்கூறுகள் அதிகம். எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோலிய பொருட்களை பெருமளவு பெருமளவு இருப்பு வைத்திருக்கும் 123 Major Accident Hazard Unit-கள் தமிழகத்தில் உள்ளன.

தமிழகம் முழுவதும் டேங்கரில் எடுத்துச்செல்லப்படும் பெட்ரோலிய பொருட்கள் நீங்கலாக பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மற்றும் ரயில் டேங்கர்கள் மூலம் பெருமளவு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன இவை மிகவும் அபாயம் நிறைந்தவை. இராசாயன விபத்துக்களால் தீ, வெடிப்பு மற்றும் நச்சுவாயு வெளியேற்றம் போன் அபாயங்களை சந்திக்க நேரிடும் இதனால் மக்களும், சுற்றுப்புற சூழலும் பெருமளவு பாதிக்கப்படும்.

காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், மதுரை, வேலூர் , தூத்துக்குடி, தஞ்வாவூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தொழிற்சாலை நிறைந்தவை. எனவே இங்கு விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம்.

கல்பாக்கத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் கொண்ட இந்திராகாந்தி அணுசக்தி மையமும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அணு உலை செயல்பட்டு வரும் நிலையில், அதே திறன் கொண்ட இன்னொரு உலை நிறுவப்பட்டு வருகிறது.