தடுப்பு கலாச்சார முறை

பேரிடர் மேலாண்மை அனைத்து துறைகளும் ஒருங்கமைக்கப்பட்ட சீரான முறையில் முயற்சி செய்யவும், ஊக்குவிக்கவும் வேண்டியவை:

1. பேரிடரினை தவிர்க்க தயார்நிலையில் இருத்தல்.
2. பேரிடர்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்துதல் மற்றும் நிவாரணமளித்தல்
3. பேரிடர் சமாளிக்க ஆயத்தங்கள்
4. பேரிடர் பாதிப்பை குறைத்தல்

பேரிடர் அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை தூண்டும் முறை

பேரிடர் சமயங்களில், "அவசரகால தடுப்பு நடவடிக்கையை தூண்டும் முறை" ஒரு விரைவான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகின்றது. இந்த முறையை பேரிடருக்கு முன்னரோ அல்லது பேரிடர் ஏற்படும் சமயங்களில் கடைபிடிப்பதனால் அனைத்து தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தவும், காலத்தை சேமிக்கவும் உதவுகின்றது. இந்த முறையின் மூலம் பேரிடர் காலங்களில் முக்கிய பணியாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளையும் எளிதில் அடையாளப்படுத்தி அவர்களின் கடமைகளை நேர்த்தியாக செயல்படுத்தும் பேரிடர் தடுப்பு யுக்தியாக விளங்குகின்றது. அது மட்டுமல்லாமல் உடனடியாக பணிகளை மேற்கொள்ளும் விதமாக பேரிடர் ஏற்பட்ட முதல் 24-28 மணி நேரத்திற்குள் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேற்பார்வையிடவும் ஏதுவாக அதிகாரிகளை அடையாளப்படுத்தி உத்திரவு மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகளை விரைவாக செயல்பட இந்த முறை உதவுகிறது.

இந்த முறையின் மூலம் உன்னிப்பான தகவல்களை கொண்டு பேரிடர் மேலாண்மையை செயல்படுத்தும் நடைமுறைகளை எளிதில் பின்பற்ற முடியும்.