பூகம்பம்

பூகம்பம் என்பது எதிர்பாராத விதமாக புரிந்துணர்ந்து கொள்ள அவகாசம் அளிக்காமல் நிகழும் ஒரு பேரழிவு நிகழ்வு ஆகும். பூகம்பம் நிகழ்வினை முன்கூட்டிறே கணிப்பது இயலாத ஒன்று. எனவே அவசர நிலமை குறித்து தயார்நிலையில் இருப்பது மதிப்புமிக்க உயிர் இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்படும் சேதங்கள்ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்க இயலும். பெறும்பாலும் உயர்வான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் விழுந்து சேதமடைவதாலேயே மிகப்பெரிய அளவில் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

முன்கூட்டி கணிப்பது மற்றும் நிகழ்வுக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுப்பது குறித்த தொழில்நுட்பம் தற்பொழுது இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்திய துணை கண்டத்தில் நிகழும் நிலஅதிர்வு தொடர்பான தகவல்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. இந்திய வானிலை மையம் பூகம்பம் அல்லது நிலஅதிர்வு ஏற்பட்டால் அதன் மூலக்காரணங்களை மதிப்பீடு செய்து அறிந்து அது தொடர்பான உரிய அரசு துறைகளுக்கு உடன் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக தகவல்களை தெரிவிக்கிறது. ஆதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல்கள் பரிமாரிக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் கீழ்கண்ட விவரப்படி முன்று நிலஅதிர்வுகண்காணிப்புமையங்கள்இயங்கி வருகின்றன.

நில அதிர்வு கண்காணிப்பு மையவிவரங்கள்

இடம் குறியீடு மாநில அட்சரேகை விவரம் தீர்க்கரேகை விவரம் குடல் மட்டத்திலிருந்து உயரம்
சென்னை MDR தமிழ்நாடு 13:04.08N 80:14.78 E 15
கொடைக்கானல் KOD தமிழ்நாடு 13:14.00N 77:28.00E 2345
சேலம் SALM தமிழ்நாடு 13:39.00N 78:12.00E 278

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகம் கீழே குறிப்பிட்டுள்ள நான்கு இடங்களிலிருந்து நிலஅதிர்வு நிகழ்வுகளை கண்காணித்து வருகிறது.

  • இராணிபேட்டை பொறியியல் கல்லூரி, வாலாஜா
  • பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரி, திருப்பத்தூர்
  • இதையா பொறியியல் கல்லூரி, சின்னசேலம்
  • பெரியார் மணியம்மை பொறியியல் கல்லுhரி, ஹோசூர்.

இயல்பான மற்றும் பேரழிவிற்கு முன்

பூகம்பம் அல்லது நிலஅதிர்வு குறித்து முன்கூட்டியே கணிக்க இயலாத ஓன்ருதலால் மேற்கூறிய இரண்டு நிலைகளையும் ஒள்றாகவே கருத இயலும்.

  • கட்டுமானம் தொடர்பான பணிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் நிலஅதிர்வு அபாய விளைவுகளை பெருமளவு குறைக்க இயலும்.
  • நிலஅதிர்வினை பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறிந்து நிலஅதிர்வு மண்டலங்களாக பிரித்து அதனை மாவட்ட நிர்வாகங்கள் அறிந்திட செய்திடல் வேண்டும். அதனை, தொடர்ந்து அபாய பகுதிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை மையங்களில் இருக்குமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பொதுமக்கள் முதல் கட்டிடம் கட்டுவோர், ஒப்பந்ததாரர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பினர்களுக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • தற்பொழுது உள்ள கட்டிடங்களின் நிலைத்தன்மையை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் எனக் கண்டறியப்பட்ட மண்டலங்களில் நிலஅதிர்வுகளை தாங்கக் கூடிய கட்டுமானங்கள் குறித்து திட்டமிடல் துறைகள் மூலம் விலியுறுத்தப்படவேண்டும். மேற்படி அம்சங்களை முழுமையாக கடைபிடிக்க கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வீட்டுமனை மற்றும் கட்டிட விரிபுணர் ஆகியோர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்
  • அடிக்கடி நிலஅதிர்வுகள் மற்றும் பூகம்பங்கள் நிகழும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமான உத்திகளை கண்டறிந்து அதனை உரிய முறையில் கடைபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • நிலஅதிர்வினை தாங்கும் வகையில் கட்டிடங்கள்கட்டுதலை பல்வேறு நிலைகள் குறித்து விரிவான விபரங்களை சாதாரண பொதுமக்கள் அறியும் வகையில் பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கண்டறிந்த பகுதிகளில் ஒருநிலையான கண்காட்சி அமைத்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • மிகப்பெரிய கட்டுமானங்களான திருமண மண்டபங்கள், வியாபார ஸ்தலங்கள், சமுதாய கூடங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் கட்டுமானங்களை நிலஅதிர்வுகளை தாங்கக்கூடிய வகையில் உரிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட வேண்டும்.
  • நிலஅதிர்வுகளை தாங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான பாடதிட்டங்களை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பாடதிட்டங்களில் சேர்க்கப்படவேண்டும்.

பேரழிவின் போது

பூகம்பம் அல்லது நிலஅதிர்வின் போது கிடைக்கக் கூடிய அனைத்து தகவல் தொடர்பு முறைகளை கையாண்டு உரிய நபர்களுக்கு உரிய தகவல்கள் பரிமாரிக் கொள்ளப்படவேண்டும். இதில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகிக்கும். நிலஅதிர்வின் போது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியது உயர்ந்த கட்டிடங்களிலிருந்து திறந்த வெளிப்பகுதிகளுக்கு சென்று உயர்ந்த பகுதிகளிலிருந்து விழும் கட்டிட இடிபாடுகளிலிருந்து ஏற்படும் பாதிப்பினை தவிர்த்து விடுவது என்பது ஒருநல்ல முயற்சி. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளை மாநில மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து உடனுக்குடன் உரிய அனைத்து வழிமுறைகளிலும் தகவல்களை பரிமாறுவது முக்கியமானதாகும்.