வெள்ளம்

வெள்ளமானது, கனமழையின் காரணமாக கால்வாய்களில் ஏற்படும் உபரி நீரினை, ஆக்கிரமிப்புகள், திட்டமிடாத வளர்ச்சி ப் பணிகள் தடுப்பதினால் ஏற்படும் செயலாகும்.

இவ்வெள்ளமானது, கால்வாய்கள் கொண்டு செல்லும் நீரின் அளவினைக் காட்டிலும், கனமழையினால் ஏற்படும் கூடுதல் மழையின் காரணமாகவும் ஏற்படும். மத்திய நீர் ஆணையம், வெள்ள முன் எச்சரிக்கை நிலையங்கள் ஏற்படுத்தி அதன்மூலம் தினசரி வெள்ள எச்சரிக்கைத் தகவல்களை, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள்/அலுவலகங்களுக்கு குறிப்பாக பருவமழைக்காலங்களில் முக்கிய ஆற்றுப் படுகைகளில் ஏற்படும் அபாயம் குறித்து முன்னெச்சரிக்கைத் தகவல்கள் கீழ்க்கண்ட நிலைகளில் வழங்கும்.

  • நிலை 4 - குறைந்த வெள்ள நிலை (ஆற்றின் நீர்மட்டமானது, எச்சரிக்கை நிலைக்கும் மற்றும் அபாய நிலைக்கும் இடைப்பட்ட அளவாகும்).
  • நிலை 3 - மிதமான வெள்ள நிலை ( ஆற்றின் நீர்மட்டமானது, உயர்ந்த வெள்ள நிலைக்கு 0.5மீ குறைவாகவும், ஆனால் அபாய நிலைக்கு அதிகமானதாகவும் காணப்படும்).
  • நிலை 2 - உயர்வெள்ள நிலை (நீர்மட்டமானது, மிக உயர்வெள்ள நிலைக்குக் குறைவாகவும் ஆனால் 0.5 மீ க்குள் காணப்படும்).
  • நிலை 1 - கண்டிராத உயர்வெள்ள நிலை (நீர்மட்டமானது மிக உயர்மட்ட வெள்ள நிலைக்கு சமமானதாகவும் அதற்கு மேலும் காணப்படும்).
பேரிடருக்கு முன்பு
  • அணைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே முன்னெச்சரிக்கை தகவல்கள் மக்களுக்கு வழங்குதல்
  • ஆறுகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு ஒலிப்பபெருக்கிகள் மூலம் முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கிட திட்டமிடுதல் வேண்டும்.
  • பாதிக்கக்கூடும் மக்களை பாதுப்பாக வெளியேற்றுதல்
  • வெள்ள நிலையினை பொதுப்பணித்துறையிடம் கலந்தாலோசித்து தெரிவித்தல்.
பேரிடரின்போது
  • மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல்.
  • காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் அவசர சிகிச்சை ஊர்திகளை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துதல். நீச்சல் தெரிந்த நபர்கள் அடங்கிய குழுக்களை மீட்புப்பணிகளில் ஈடுபடுத்துதல்.
பேரிடர் அல்லாத போது

மாவட்ட ஆட்சித் தலைவர், அணைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீரின் மட்டத்தினையும், தக்க சமயங்களில் அதை வெளியேற்றும் பணிகள் குறித்து அலுவலர்கள் அறிந்துள்ளனரா என பொதுப்பணித்துறை அலுவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏரிகள் மற்றும் அணைகளின் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டனரா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

வெள்ள அறிவிப்பு நிலைகள்

வெள்ள முன்னெச்சரிக்கை:

வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தயார் நிலையில் இருத்தல்.

வெள்ள எச்சரிக்கை

வெள்ளத்தினை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

கடுமையான வெள்ள எச்சரிக்கை

மனித உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்படும் அபாயம் அதிகம்.

வெள்ள எச்சரிக்கை திரும்பப் பெறுதல் பேரிடர் அல்லாத காலங்களில் அணைகள் பராமரித்தல்
  • அணைகள் பராமரித்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி அணைகளிலிருந்து நீர் வெளியேற்றுதல், பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகளின் விவரங்கள் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையத்திற்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.
  • மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மின்சக்தி எடுக்கும் அணைகளிலும், உபரி நீர் வெளியேற்றும் மற்றும் பராமரித்தல் குறித்த தகவல்கள் மாநில மற்றும் மாவட்ட அவசர மையக் கட்டுப்பாட்டு மையங்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.
  • வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தவுடன், ஆற்றின் கரையோரமுள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மக்களை நடமாட விடாமல் தடுப்பு நடவடிக்களில் ஈடுபடுதல் வேண்டும்.