சுனாமி (ஆழிபேரலை)

சுனாமி, கடல்நீர் உட்புகுதல் மற்றும் கடல் அலைச்சீற்றம் தொடர்பாக தகவல்களை கடலோர கிராமமக்களுக்கு இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை தகவல் மையம் மூலமாக கண்காணித்து தகவல் தெரிவிக்கும் பணியினை இந்திய தேசிய கடல்சார் ஆராய்ச்சி தகவல் மையம் 24 மணிநேரமும் மேற்கொண்டுவருகிறது. ருசூநுளுஊடீ வின் நாடுகளுக்கு இடையேயான கடல்சார் ஆணைக் குழுவின் படி இந்திய கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கான பிராந்திய சுனாமி சேவை மையமாகவும் மேற்படி இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.

கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோளில் 6.5 அளவுகள் கொண்ட நிலஅதிர்வு 100 கீ.மீ கடல் ஆழத்தில் ஏற்படுமாயின் இந்திய தேசிய கடல் ஆராய்ச்சி தகவல் மையம் உடன் நிகழ்நேர சுனாமி எச்சரிக்கைகளை அனுப்ப தொடங்கிவிடும். மேற்படி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் மாநில அரசுகளுக்கும் உடன் தெரிவிக்கப்படும். ஆழ்நிலை அழுத்தம் குறித்த பதிவுகள் விவரம் முன்னெச்சரிக்கை தகவல் அமைப்புகள் மூலமாக பெறப்பட்டு நிகழ்நேர பேரழிவு அபாய நிலையினை உறுதி செய்ய இயலும். ரிக்டர் அளவுகோலில் 6.5 முதல் 7.0 அளவுகள் கொண்ட நிலஅதிர்வுகள் குறைந்த அளவிலான சுனாமி பாதிப்பினையும் 7.1 அளவிற்கு மேற்பட்ட நிலஅதிர்வுகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதனை அறியவும்.

இந்திய தேசிய கடல்சார் ஆராய்ச்சி தகவல் மையத்தினால் தெரிவிக்கப்படும் எச்சரிக்கை விவரங்கள்

சுனாமி ஏற்பட போகும் பகுதிக்கான எச்சரிக்கை, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்துவது மற்றும் அலைகளின் உயரம் மற்றும் அதன் வேகம் குறித்த தகவல்களை நிகழ்நேர சுனாமி எச்சரிக்கையாக தெரிவிக்கும் பணியினை இந்திய தேசிய கடல் ஆராய்ச்சி தகவல் மையம் மேற்கொண்டு வருகிறது.

அ) எச்சரிக்கைக்குரியப் பகுதி

நிலஅதிர்வு உருவாகிய மையப்பகுதி மற்றும் 2 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சுனாமி அலைகளின் அடிப்படையில் 60 நிமிட அலை பயண நேரம் கொண்ட பகுதிகள் அனைத்தும் சுனாமி அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படும்.

ஆ) தயார் நிலையில் இருக்க வேண்டிய பகுதி

ஆலை உயரம் 1 முதல் 2 மீட்டருக்கு மேலாகவும் அலை பயண நேரம் 60 நிமிடத்திற்கு அதற்கு மேல் உள்ள பகுதிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டிய பகுதிகளாகும்.

இ) கண்காணிப்பு பகுதி

சுனாமி அலை உயரம் 2 மீட்டருக்கு குறைவாகவும் 60 நிமிட பயண நேரத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகளில் உரிய சுனாமி அபாயம் குறித்து கண்காணிப்புடன் இருக்க வேண்டி பகுதியாக கருதப்படும்.

ஆலை பயண நேரத்தின் அடிப்படையில் அழிவின் நிலை மாறுபடும். கடல்படுகையில் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் மற்றும் கடல் பரப்பிற்கு மேல் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் மற்றும் அலைகளின் தன்மைகளின் அடிப்படையில் நிகழ்நேர அலைஉயரம் மாறுபடும். கடல்படுகை அழுத்தமானியின் அளவுகளின் அடிப்படையில் சுனாமி அலைவேகம் உணரப்படாமல் இருக்குமேயானால் அல்லது குறைந்த அளவிலான அழிவை கூட ஏற்படுத்த இயலாத அலை உயரம் எனக் கணிக்கப்பட்டாலும் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிப்பு திரும்பப் பெறப்படும். குறிப்பாக, நில அதிர்வு ஏற்பட்ட பின் குறைந்தது ஆறு அறிவிப்புகளாவது இந்திய தேசிய கடல்சார் ஆராய்ச்சி தகவல் மையத்தினால் வெளியிடப்படும்.